நடிகர் அபிநய் மறைவு: நடிகை விஜயலட்சுமி உருக்கமான பதிவு

14589பார்த்தது
நடிகர் அபிநய் மறைவு: நடிகை விஜயலட்சுமி உருக்கமான பதிவு
உடல்நலக்குறைவால் காலமான நடிகர் அபிநய் குறித்து நடிகை விஜயலட்சுமி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். 'சென்னை 28' படத்திற்கு பின் அபிநய்யுடன் விளம்பரத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், அப்போது அவர் தனிமை, வலி, அழுத்தங்களால் மது அருந்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். "என் வலிகளை குறித்து யாரும் இவ்வளவு கேட்டதில்லை" என்று அபிநய் தன்னிடம் கூறியதை நினைவு கூர்ந்த விஜயலட்சுமி, அவரது போராட்டம் முடிவுக்கு வந்ததை நினைத்து, "சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி" என்று கூறி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி