தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். இச்செய்தி அறிந்து மிகுந்த துயருற்றதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.