நடிகர் அஜித் தாயார் மறைவு: அஞ்சலி செலுத்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

5290பார்த்தது
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவையொட்டி, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அன்னாரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இல்லத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். சோகத்தில் மூழ்கியுள்ள அஜித் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி:OneIndia

தொடர்புடைய செய்தி