கேரளாவின் திருவனந்தபுரத்தில் பைக் மீது மோதிவிட்டு, நிறுத்தாமல் சென்ற நடிகர் மணியன் பிள்ளை ராஜுவை போலீசார் இன்று (பிப்., 06) கைது செய்தனர். கிளப்பில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போது, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியது நடிகர் என்பது தெரியவந்தது. காரை ஓட்டியது தானே என்று மணியன் ஒப்புக்கொண்டார். காயமடைந்த இளைஞர்கள் சிகிச்சையில் உள்ளனர். மணியன் தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்துள்ளார்.