நடிகர் அருள்நிதிக்கு படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சகோதரர் மு.க.தமிழரசுவின் மகன் என்ற முறையில் அவரை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு சென்ற அவர் அருள்நிதியின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.