பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தத் தகவலுக்கு அவரது மகளும் நடிகையுமான ஈஷா தியோல் தற்போது விளக்கம் அளித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தன் தந்தை நல்ல உடல்நலத்துடன் நலமாக இருப்பதாகவும் ஈஷா தியோல் தெரிவித்துள்ளார்.