பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மரணமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. இந்நிலையில், அவரது மரண செய்தி உண்மை இல்லை என்றும், அவரை வெறுக்கும் சிலர் இதுபோன்று வதந்திகளை அடிக்கடி பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிக்கும் இந்த சூப்பர் ஸ்டார் மீது ஏன் இந்த வன்மம் என ரசிகர்கள் இணையத்தில் அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.