நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

4778பார்த்தது
நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக, நேற்று (பிப்., 17) நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். உன்னிகிருஷ்ணன் தங்கத் தகடுகளை ஜெயராமின் வீட்டிற்கும் கொண்டு சென்று பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று ஜெயராம் விசாரணைக்கு ஆஜராகி, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.