நடிகர் மனோஜ் பாரதிராஜா உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது. நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் காலமான நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நீலாங்கரை இல்லத்தில் இருந்து இன்று மாலை 4:30 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், பெசன்ட் நகர் மயானத்தில் 5.40 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.