நடிகர் முத்துக்காளையின் மனைவி கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மே.18) காலை 9 மணிக்கு காலமானார். சில தினங்கள் முன், தனது மனைவி மாலதியை தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஒரு ஆபரேஷனுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், ஆபரேஷன் முடிந்து 17 நாள் ஆன நிலையில் நுரையீரல் தொற்று உட்பட சிறிய சிறிய தொற்றுகள் காரணமாக என் மனைவி மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார் என்றும் கூறி முதலமைச்சர் விஜய்யிடம் உதவி கேட்டிருந்தார்.