நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும், பிரபல கன்னட இயக்குநருமான ஜோ சைமன் (80) மாரடைப்பால் நேற்று (பிப்., 14) காலமானார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியின் போது ஜோ மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. 1970களில் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜோ சைமன் இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான 'ஒண்டு பிரேமதா கதே'வில் ரஜினிகாந்த் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.