நடிகர் ராஜ்கிரண் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், நாட்டின் பொதுவான
அரசியல் நிகழ்வுகள், சமூகப் பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக தனது கருத்துக்களை தீவிரமாக பகிர்ந்து வருகிறார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக எழுந்த விவாதங்களின்போது, இங்குள்ள இஸ்லாமியர்கள் இந்நாட்டின் ரத்த சொந்தங்கள் என்று கூறி தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தீவிர அரசியலில் சேராவிட்டாலும், தேவையற்ற பொய் பிரச்சாரங்களை எதிர்த்தும், பொது அமைதியை வலியுறுத்தியும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.