சென்னையில் நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராம் சரண், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். “உச்ச நட்சத்திரமாக இருந்தவர், அதனை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்துள்ளார். அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சராகியிருப்பது பாராட்டுக்குரியது” என்று அவர் கூறினார். விஜயின்
அரசியல் பயணம் மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பை ராம் சரண் பாராட்டியதுடன், அவரது புதிய பொறுப்புக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நன்றி: PT