ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில்
சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து, தனக்கு பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.
பிரபு ஆகியோருக்கு நடிகர்
சூர்யா தனது எக்ஸ் (X) பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அன்பான ரசிகர்களுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.