நடிகர் சிவராஜ்குமாருடன் இணைந்து அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படம் தொடக்கம்

4854பார்த்தது
நடிகர் சிவராஜ்குமாருடன் இணைந்து அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படம் தொடக்கம்
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காதலை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், ரஜினிகாந்திடம் இருந்தும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி