தமிழ்நாட்டில் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடலாம் என்ற முதலமைச்சர் விஜய்யின் புதிய உத்தரவிற்கு நடிகர் விஷால் வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துள்ளார். திரையுலகின் தற்போதைய சூழலை புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட இந்த முற்போக்கான முடிவு, சினிமாத்துறையின் வருவாய் ஈட்டுதலில் மிகப்பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.