சட்டவிரோத பார் மீது நாதகவினர் தாக்குதல்

23பார்த்தது
சட்டவிரோத பார் மீது நாதகவினர் தாக்குதல்
கோவை விமான நிலையத்தின் பின்புறம் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு மதுபான பார் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அண்மையில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் நடந்த இடத்திற்கு அருகிலேயே இந்த பார் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக நாதகவினர் குற்றஞ்சாட்டி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும், அங்கிருந்த பொருட்களை உடைத்து நாதகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி