தூய்மைப் பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை அம்பிகா

9பார்த்தது
சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை அம்பிகா, “தூய்மை தேவதைகள் என பெயர் வைப்பது முக்கியம் இல்லை. அந்த தேவதைகளின் கண்களில் இருந்து ரத்தக் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார். மேலும், படப்பிடிப்பு இருந்ததால் போராட்டத்திற்கு முன்னதாக வர முடியவில்லை என்றும், அதற்காக தூய்மைப் பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். நடிகை அம்பிகா மக்கள் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி