அரசியலில் குதிக்கும் நடிகை பூமி பெட்னேகர்

55பார்த்தது
அரசியலில் குதிக்கும் நடிகை பூமி பெட்னேகர்
பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனது ரத்தத்திலேயே நாட்டுக்கு சேவை செய்வது கலந்திருப்பதாகவும், வருங்காலத்தில் ஆழமான முறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அரசியலுக்கு வர தயங்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது தந்தை சதீஷ் பெட்னேகர் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி