ஐதராபாத்தில் நடந்த ‘யுபோரியா’ படவிழாவில் பேசும்போது நடிகை பூமிகா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். மேலும் பேசிய அவர், “இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து நிம்மதியாக தூங்க முடியவில்லை; நள்ளிரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்” என கூறியபோது தேம்பி அழுதார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.