மலையாள சினிமா, சின்னத்திரை நடிகை ராஜி மேனன், 'தான் ஒரு நாயராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' என குறிப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்வதேச நாயர் சங்க நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டதை அவர் சாதியை முன்னிறுத்தி பதிவிட்டதால், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மலையாள முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பொதுவெளியில் சாதி பெயர்களை தவிர்த்து வரும் நிலையில், நடிகையின் இந்த செயலை மக்கள் விமர்சிக்கின்றனர்.