தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயதான புலவர் கணேசன், சின்னத்திரை மற்றும் திரைப்பட துணை நடிகை தீபாவின் தந்தை ஆவார். இவர் முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கினர். இதில் கணேசன் பலத்த காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.