நடிகை தேவி பிரியாவின் கார் ஓட்டுநர் பலி.. சம்பவ இடத்தில் கண்ணீர் அஞ்சலி

6458பார்த்தது
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான தேவி பிரியா, கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது கார் ஓட்டுநர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நினைவில் வாடி வந்த நடிகை தேவி பிரியா, ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்த இடத்திற்குச் சென்று அவரை நினைத்து கண்ணீர் வடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி