மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பதவி விலக கோரி டெல்லியில் நடைபெறும் CJP இளைஞர் அமைப்பினரின் போராட்டத்திற்கும், லடாக் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்திற்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். நமது கல்வி முறையை மேம்படுத்த போராடும் மாணவர்களுடனும் சோனமுடனும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.