திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய தோழியான நடிகை த்ரிஷா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால், ஓராண்டுக்கு பிறகு நடக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அவருக்கு மகளிர் நலன் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே தவெகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 10 பேரின் இலாகாக்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.