திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா இன்று (பிப்.19) சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோயிலுக்கு சென்ற அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த திரிஷாவை கண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.