அதானி குழுமம் 2035-ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு உகந்த 'AI டேட்டா செண்டர்களை' அமைக்க ரூ.8.3 லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. தொடர்புடைய கிளவுட் மற்றும் சர்வர் உற்பத்தி துறைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.20 லட்சம் கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உலக தரத்திற்கு உயர்த்த இந்த மெகா முதலீடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.