சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பும் நிலையில், மக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான சேவைகளுடன், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயணங்களும், நாளை அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயணங்களும் இயக்கப்படும்.