இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இனி மாதம் 5 முறை மட்டுமே ஏடிஎம்-ல் கட்டணமின்றி பண பரிவர்த்தனை செய
்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.17 கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்த குறுஞ்செய்தி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதால், தங்களின் பண பரிவர்த்தனைகளை திட்டமிட்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.