சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (பிப்., 20) அமைச்சர் துரைமுருகனின் இருக்கையில் அமர்ந்திருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உடல்நலக்குறைவால் சில நாட்களாக துரைமுருகன் பேரவைக்கு வரவில்லை. இந்த நிலையில், பேரவையின் கடைசி நாளான அவை முன்னவரான துரைமுருகனின் இருக்கையில் அன்பில் மகேஷ் அமர்ந்திருந்தார். இன்று ஒரு நாள் மட்டும் அவர் அவை முன்னவர் போல் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அன்பில் மகேஷ்-க்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் உதயநிதி அமர்ந்திருந்தார்.