தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவத்தின் எதிரொளியாக விஜய்யின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா? என உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.