தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், லாட்டரி அதிபர் மார்டினின் மனையுமான லீமா ரோஸ் பாரி வேந்தரின் ஐஜேகே கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இன்று (ஜன., 10) இணைந்துள்ளாார். ராமநாதபுரம் திருவாடனையில் பிறந்த இவர், அதே தொகுதியில் வரும் தேர்தலில் சீட் வாங்க அதிமுகவில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது மகன் சார்லஸ் மார்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை அண்மையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.