தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் தனது மகன் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய 'இந்திய ஜனநாயக கட்சியில்' இணை பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அந்தப் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.