தேர்தலுக்கு முன் தன்னிடம் துணைப் பொதுச்செயலாளர்
பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா, மறுத்ததால் தவெகவை குத்தகைக்கு எடுத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் நேற்று பேசிய அவர், தவெக ஆட்சியில் விலைவாசி 40% உயர்ந்துவிட்டதாகவும், கடன் சுமைக்கு இடையே புதிய தலைமைச் செயலகம் தேவையா எனவும் கேள்வி எழுப்பினார். கூட்டணிக் கட்சிகள் விலகினால் ஆட்சி கவிழும் என்றும், கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடப்பதால் ஆதவ் அடக்கி வாசிக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.
நன்றி: சன் நியூஸ்