ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் சேர்க்கை 20% குறைவு

2248பார்த்தது
ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் சேர்க்கை 20% குறைவு
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 2024-2025 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 76,300 ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட 20% குறைவு. ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் பள்ளிகளை மேம்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்றினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றும், கல்வித் தரம் உயரும் என்றும் மனுதாரரான மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி