இந்தியக் கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுள்ளார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களை பாதுகாக்க, கடற்படையை உச்சபட்ச தயார்நிலையில் வைத்திருப்பேன் என உறுதி அளித்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற முன்னாள்
தளபதி தினேஷ் திரிபாதியின் சிறந்த சேவைக்கு அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.