சென்னையில் 'மேற்கு
ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்' தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், பல லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் வசூலிக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது சமூக நீதிக்கு எதிரானது எனப் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் சாடியுள்ளார்.