டி20 உலககோப்பை குரூப் டி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று (பிப்.8) நடைபெற்ற இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இலக்கை நோக்கை களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.