பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று (பிப்.6) நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதி ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த தவறிவிட்டு, அண்டை நாடுகள் மீது வீண் பழிசுமத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.