ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தால் இதுவரை 2,205 பேர் உயிரிழந்த நிலையில், 3,394 பேர் படுகாயமடைந்துள்ளனர். குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் எங்கு திரும்பினாலும் மரண ஓலம் கேட்கிறது. இன்னும் பல கிராமங்களை மீட்புப் படை சென்றடையாத நிலையில், உயிர்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.