மணிப்பூரில் குறிப்பிட்ட 13 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற அனைத்துப் பகுதிகளையும் மீண்டும் ‘கலவரப் பகுதி’யாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி அங்கு அமலில் உள்ள ராணுவத்திற்கான ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.