மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு பெருவிழா நடைபெற உள்ள நிலையில், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கோயில் கோபுரங்கள் மற்றும் முக்கிய பகுதிகள் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வருகின்றன. விழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே திருவிழா போல் காட்சியளிக்கிறது. குடமுழுக்கு விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவதால், கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.