இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள குறுகிய தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 'அக்னி-1' பாலிஸ்டிக் ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த அதிநவீன ஏவுகணை, சுமார் 700 கிலோமீட்டர் முதல் 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது. மேலும், அணுஆயுதங்கள் மற்றும் 2,500 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறனுடன் இந்த ஏவுகணை படைக்கப்பட்டுள்ளது.