அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி.. பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

5பார்த்தது
நடுத்தர தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 சோதனை வெற்றி அடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று (பிப்.6) அறிவித்துள்ளது. ஒடிசா -சந்திப்பூர் சோதனை ஒருங்கிணைந்த தளத்தில் இருந்து அக்னி-3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் மிக துல்லியமாக உறுதி செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த அக்னி-3 ஏவுகணை சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி