கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கோடை காலத்தின் உச்சக்கட்டமான அக்னி நட்சத்திரம், 24 நாட்கள் நீடித்த பிறகு இன்று (28ஆம் தேதி) நிறைவடைந்தது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்றும், ஜூன் மாத முதல் வாரத்தில் தான் வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.