தமிழக முதல்வர்
விஜய் முன்னிலையில் ரூ.18,600 கோடியில் 3 திட்டங்களைச் செயல்படுத்த எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் ரூ.15,000 கோடியில் தகவல் தரவு மைய விரிவாக்கம் (500 பேருக்கு
வேலை), கோவையில் ரூ.2,500 கோடியில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் திட்டம், மற்றும் திருவள்ளூர் காட்டுப்பள்ளியில் ரூ.1,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்கும்.