விவசாய கடன் தள்ளுபடி குறித்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்துள்ளார். நாகை வேளாங்கண்ணியில் இன்று (மே 30) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஆர்பிஐ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் இம்முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஆர்பிஐ கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இருப்பினும் விவசாய கடன்களை, வரம்புகள் ஏதும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.