5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவெக அரசு விரைவில் வேளாண்மைத்துறை அமைச்சரை நியமிக்கும். அதன்பிறகு, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.