ஆந்திராவில் 'AI டாக்டர்' திட்டம் அறிவிப்பு

20பார்த்தது
ஆந்திராவில் 'AI டாக்டர்' திட்டம் அறிவிப்பு
ஆந்திர மாநில மக்கள் ஒவ்வொருவருக்கும் 'AI டாக்டர்' வழங்கும் முன்னோடி திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் முன்மொழிந்துள்ளார். பில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இதற்கென பிரத்தியேக AI மாடலை உருவாக்கி, மக்களின் சுகாதார தரவுகளை டிஜிட்டல் முறையில் சேமித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் வாயிலாகவே தொடக்கநிலை மருத்துவ ஆலோசனைகளை உடனுக்குடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி