ஏ.ஐ. மூலம் படங்கள் உருவாக்குவதற்கான செலவு, அதன் தரம் மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும். குறைந்த தரத்தில் 10 படங்களுக்கு சுமார் ரூ.10, நடுத்தர தரத்தில் ரூ.36, உயர்தரத்தில் ரூ.142 செலவாகிறது. இது அடிப்படை செலவு மட்டுமே. ஒரு படத்திற்கு 0.1 முதல் 4 வாட் வரை மின்சாரம் தேவைப்படலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஏ.ஐ. படங்களை உருவாக்கும்போது, மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.